தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோயில் யானை பராமரிப்பு செலவாக ரூ.3 லட்சம் செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்காலத் தடை! - Madurai Branch of the High Court

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் யானை பராமரிப்புச் செலவாக ரூ.3 லட்சம் செலுத்த வனத்துறை சார்பில், அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu

By

Published : Nov 4, 2020, 2:25 PM IST

மதுரை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அதில், "திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட தெய்வானை யானை கடந்த மே மாதம் 24 ஆம் தேதி யானையை பராமரிக்கும் பகனை தாக்கியது. அதில் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி திருச்சியில் உள்ள மாவட்ட வன காப்பகத்துக்கு யானை அனுப்பப்பட்டது.

பின்னர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பொள்ளாச்சி ஆனைமலை அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் திருச்சி மாவட்ட வன காப்பகத்திலிருந்து கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை கோயில் யானை பராமரிப்பிற்காக ரூபாய் 3 லட்சம் பராமரிப்பு தொகையாக செலுத்தக்கூறி கடிதம் அனுப்பப்பட்டது. கால்நடை மருத்துவரின் அறிவுரையின் பேரில் யானை வன காப்பத்திற்கு அனுப்பப்பட்டது.

எனவே, திருச்சி மாவட்ட வனகாப்பகம் செலுத்தக் கூறிய ரூபாய் 3 லட்சத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி மாவட்ட வன காப்பகம் பணம் செலுத்த அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும், இது குறித்து தமிழ்நாடு முதன்மை வனப் பாதுகாவலர், திருச்சி மாவட்ட வன பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details