தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா இரண்டாம் அலை பரவியதற்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது - மதுரை கிளை - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்

கரோனா 2ஆம் அலை பரவியதற்கு தேர்தல் காரணமாக அமைந்துவிட்டது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கரோனா 2ஆம் அலை
கரோனா 2ஆம் அலை

By

Published : Jun 23, 2021, 11:48 PM IST

மதுரை: மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "உள்ளாட்சி பதவிகள் கடந்த 2016 அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான தகவல்களை வழங்கிவருகிறது.

தேர்தலை நடத்துவதற்கான நோக்கமே இல்லை. தொடர்ந்து தேர்தலை தள்ளிப்போடுவதே நோக்கமாகவே தெரிகிறது.

நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் ஊரக பஞ்சாயத்து உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை மாநகராட்சி, நகராட்சிகளே. பொது சுகாதாரம், தண்ணீர், சாலை, கட்டட பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். ஆகவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கான தேர்தல் 21 முறை தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை உருவாவதற்கு காரணமாக தேர்தல் அமைந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு தேர்தல் பரப்புரைகளில் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபட்டால் கரோனா பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. அதன் தீர்ப்பு வெளி வந்த பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details