மதுரை மாவட்டம், இளமனூர் கோவில் திருவிழாவில், முதல் மரியாதை வழங்குவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் அப்பகுதியில் வசித்து வரும் காஞ்சிவனம் என்பவரை ஓட ஓட விரட்டி வீட்டு வாசலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
கோயில் திருவிழாவில் தகராறு; ஓட ஓட ஒருவர் வெட்டிக் கொலை!
மதுரை: கோயில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Temple function issue, one killed
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.