மதுரை:சு. வெங்கடேசன் எம்பி ட்விட்டர் மூலமாக இன்று (அக். 18) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "தேச முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று ஆவணங்களை ஏலம்விடும் பிரசார் பாரதி அமைப்பின் முடிவைக் கைவிடுமாறு ஒன்றிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
அக்கடிதத்தில், "தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம்விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு அக்டோபர் 8 அன்று முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம்விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணயசபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும்.
நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினைச் சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது. இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது நாட்டின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாகப் பாதிக்கக் கூடும்.