தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இந்திய மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும்' - இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான் - தமிழ்நாடு மீனவர் பிரச்சனை

சிறையில் இருக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான் பேட்டி
இலங்கை எம்பி செந்தில் தொண்டைமான் பேட்டி

By

Published : Jan 11, 2022, 9:53 AM IST

சிவகங்கை: சிவகங்கையை அடுத்த பட்டமங்களம் கிராமத்தில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, இலங்கை கடற்படையால் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்திய மீனவர் பிரச்சனை

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு குறித்த கேள்விக்கு 'இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வராமல் தடுக்க இந்தியக் கடலோர காவல்படை ரோந்து பணியில் ஈடுபட்டாலே இதற்கான தீர்வு கிடைத்துவிடும் என்றார்.

பொருளாதார பிரச்சனை

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கேள்விக்கு அவர், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கி உள்ளதாகவும், விரைவில் பொருளாதாரம் மீட்கப்படும் நிலையில் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: Jallikattu Restriction: 'ஒரு போட்டியில் பங்கேற்கும் காளையோ வீரரோ மற்ற போட்டிகளில் பங்கேற்க முடியாது'

ABOUT THE AUTHOR

...view details