இது குறித்து தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் செய்திக் குறிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், "மதுரையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்கானீர் செல்லும் வாராந்திர விழாக்கால சிறப்பு ரயில் திருநெல்வேலி-பிலாஸ்பூர், மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் ராமேஸ்வரம்-ஓகா (குஜராத்) வாராந்திர சிறப்பு ரயில் நாகர்கோவில்-மும்பை வாரம் இருமுறை சிறப்பு ரயில் ஆகியவை மார்ச் மாத இறுதிவரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த ரயில்களின் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வண்டி எண் 06053 மதுரை-பிக்கானீர் வாராந்திர விழாக்கால சிறப்பு ரயில் மதுரையிலிருந்து ஏப்ரல் 1, 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06054 பிக்கானீர்-மதுரை வாராந்திர விழாக்கால சிறப்பு ரயில் பிக்கானீரிலிருந்து ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.
வண்டி எண் 06070 திருநெல்வேலி-பிலாஸ்பூர் வாராந்திர விழாக்கால சிறப்பு ரயில் ஏப்ரல் 4, 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் பிலாஸ்பூரிலிருந்து ஏப்ரல் 6, 13, 20, 24, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.
வண்டி எண் 06072 திருநெல்வேலி - மும்பை தாதர் வாராந்திர விழாக்கால சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல் 7, 14, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய புதன்கிழமைகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06071 மும்பை தாதர் திருநெல்வேலி வாராந்திர விழாக்கால சிறப்பு ரயில் தாதரிலிருந்து ஏப்ரல் 8, 15, 22, 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10, 17, 24, ஜூலை 1 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.