மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இவர் இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு, தெற்கு வாசல் பகுதியில் உள்ள தனது மூன்றாவது மனைவியுடன் வாழ்ந்துவந்தார்.
ஏற்கனவே, திருமணம் செய்துகொண்ட மனைவிகளுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குத் தனது சொத்தை பிரித்துக் கொடுப்பது தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த மணியின் மூத்த மனைவியின் மகன் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து தெற்குவாசல் ரணவைத்திய சாலைப் பகுதியில் மணி வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தெற்குவாசல் காவல் உதவி ஆணையர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக மோப்ப நாய் உதவியுடன் கைரேகை வல்லுநர்களும் விசாரணை நடத்திவருகின்றனர். சொத்துக்காக பெற்ற தந்தையை கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...மதுரையில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை