தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மகன் தந்தையை கொன்ற வழக்கு: 5 பேர் கைது! - தந்தைக் கொலை மதுரை

மதுரை: சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன் வழக்கில் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர்.

தந்தையை கொன்ற மகன் வழக்கு
தந்தையை கொன்ற மகன் வழக்கு

By

Published : Aug 23, 2020, 3:11 PM IST

மதுரை மாவட்டம் தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மணி. அவருக்கு மூன்று மனைவிகள். அதில் இரு மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டு, தெற்கு வாசல் பகுதியில் உள்ள மூன்றாவது மனைவியுடன் வசித்துவந்தார். நாளடைவில் மனைவிகளின் மகன்களுக்கு அவரது சொத்தைப் பிரித்துக் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஆக.22) அவரது மூத்த மனைவியின் மகனான கார்த்திகேயன், தனது நண்பர்களுடன் தெற்குவாசல் சென்று, ரணவைத்திய சாலையில் சென்றுகொண்டிருந்த தந்தை மணியை ஓட ஓட விரட்டி கொலை செய்தார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனிடையே கார்த்திகேயன் உள்பட அவரது நண்பர்கள் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது அவரகள் மதுரை மேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சொத்துக்காக தந்தையை ஓட ஓட விரட்டி கொலைசெய்த மகன்

ABOUT THE AUTHOR

...view details