சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த மேலையூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.
அதில், "எங்கள் பகுதியான மேலாயூர் வேளாண்மை நிலம் அதிகமுள்ள பகுதியாகும். எங்கள் ஊர் பகுதியிலுள்ள மேலையூர் கண்மாயில் உள்ள நீர்ப்பாசனத்தை வைத்து வேளாண்மை செய்துவருகிறோம்.
இந்நிலையில், எங்கள் பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் பொதுப்பணித் துறையினர் ஒரு சிலருக்கு கண்மாயை சீரமைக்கும் பணியை வழங்கியுள்ளனர்.
இதனைப் பயன்படுத்தி எங்கள் ஊரைச் சேர்ந்த ஜேசிபி எந்திரம் வைத்திருக்கும் மதிவாணன் என்பவர் குடிமராமத்துப் பணிகள் செய்வதாகக் கூறிக்கொண்டு எங்கள் பகுதியில் உள்ள கண்மாயில் உள்ள மணலை சட்டவிரோதமாக அள்ளி தனது சொந்த இடத்தில் பதுக்கிவைத்துள்ளார்.