மதுரை: செங்கோட்டை - சென்னை எழும்பூர் வரை வாரம் மும்முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாள்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செங்கோட்டை - சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாள்களில் மாற்றம்!
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரை வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாள்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.
செங்கோட்டை சென்னை சிலம்பு ரயில்
வண்டி எண் 06182 செங்கோட்டை - சென்னை எழும்பூர் வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிலம்பு சிறப்பு ரயில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. அதேபோல வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 06181சிலம்பு சிறப்பு ரயில், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது.