தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தென்மாவட்டங்களில் கோயில்களை திறக்க வேண்டும் - செல்லூர் ராஜூ - sellur raju

தென்மாவட்டங்களில் கோயில்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

By

Published : Jun 28, 2021, 4:52 PM IST

Updated : Jun 28, 2021, 6:19 PM IST

மதுரை : கோரிப்பாளையத்தில் அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கடந்த அதிமுக ஆட்சியில் மதுரைக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்தும் தற்போதும் செயல்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக வரும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயர் பதவியை அதிமுக கைப்பற்றும். அதிமுவிற்கு அதிக மாமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.

திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அரசு அமைத்துள்ளது. அங்கன்வாடி, சத்துணவு, கிராம அலுவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாக இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்பது சந்தேகமே.

தென்மாவட்டங்களில் கோயில்களை திறக்க வேண்டும் - செல்லூர் ராஜூ
தற்போது அதிகரித்துள்ள விலைவாசியை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூறுகிறார்கள். அதனை தடுக்க வேண்டும். டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது.எனவே தென்மாவட்டங்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோவில்களை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி

Last Updated : Jun 28, 2021, 6:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details