தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எம்ஜிஆர் குறித்த சசிகலாவின் கருத்து... என்ன சொல்கிறார் செல்லூர் ராஜூ - sasikala audio

எம்ஜிஆர் இப்போது இல்லாத நிலையில் அவரைப் பற்றி சசிகலா பேசிக்கொண்டிருக்கிறார் அது அவருடைய தனிப்பட்ட கருத்து என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

By

Published : Jul 3, 2021, 8:49 PM IST

Updated : Jul 3, 2021, 10:49 PM IST

மதுரை:அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (ஜூலை 3) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான். அதிமுகவில் பொதுச்செயலாளர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும்.

மதுரையில் அமைச்சர் தன்னுடைய தொகுதியில் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறார். தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது. அதேசமயம், தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

குறை கூறுவதை தவிர்க்கவும்

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு

அதிமுக ஆட்சியின்போது தடுப்பூசி மீதான நம்பிக்கையை கெடுத்தவர்கள் தற்போதையை ஆளும் கட்சியினர். முன்னாள் சுகாதார துறை அமைச்சரை குறை கூறுவதை தவிர்த்துவிட்டு முதலமைச்சர் கொடுத்துள்ள மருத்துவத்துறை அமைச்சர் பணியை செம்மையாக செய்ய வேண்டும்.

அது மக்களுடைய விருப்பம்

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும். எம்ஜிஆர் இப்போது இல்லாத நிலையில் அவரைப் பற்றி சசிகலா பேசிக்கொண்டிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களை சந்திக்கலாம். அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களுடைய விருப்பம்.

'ஒன்றிய அரசு' மக்களை சென்றடையாது

உணவுத் துறை அமைச்சர் அ.சக்கரபாணி சிறப்பாக செயல்படுவார், அவர் அனுபவம் வாய்ந்த அமைச்சர். விரைவில் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் பணியினை முடிக்க உணவுத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று சொல்வதால் மக்கள் மனதில் நிலைத்திருக்க முடியாது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை தற்போதுவரை நிறைவேற்றவில்லை" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மலர்ந்த நான்கு தாமரைகள் பிரதமருடன் சந்திப்பு!

Last Updated : Jul 3, 2021, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details