மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்குள்பட்ட பாரதியார் மூன்றாவது தெருவில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சந்தேகத்திற்குரிய வகையில் மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்துப் பணிக்குச் சென்ற காவலர்கள், அவற்றைச் சோதனை செய்தனர்.
அப்போது மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வீட்டிற்குள் சோதனைசெய்தபோது உள்ளேயும் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.
அதன்காரணமாக காவல் துறையினர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அசோக் முத்தையா, கண்ணன் உள்பட ஏழு பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்த குட்கா பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், பறிமுதல்செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் எனவும், அவற்றை மதுரையிலிருந்து திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு குட்கா விற்பனைசெய்ய வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:ரூ. 42 லட்சம் மதிப்பிலான பான் மசாலா பறிமுதல்