மதுரை: மதுரையைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2011ஆம் ஆண்டு எல்லை தாண்டும் மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக அதிநவீன வசதி கொண்ட வாக்கி-டாக்கி மீனவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக 57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி 3 டவர்கள் அமைக்கப்பட்டு 3 ஆயிரத்து 100 வாக்கி டாக்கி வழங்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் இதுவரை இந்த ஊழல் குறித்து முறையாக விசாரணை நடைபெறவில்லை. இதுகுறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் விசாரணை செய்ய மனு அளிக்கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கியதில் நடைபெற்ற ஊழல் குறித்து உடனடியாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.