மதுரை மாவட்டம் சக்குடி முப்புலி சாமி கோயில் மாசி உற்சவத்தின் போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடந்த ஜல்லிக்கட்டில், மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கம்பம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட காளைகளும், 846 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். அப்போது சீறிப்பாய்ந்த காளைகளோடு வீரர்கள் மல்லுக்கட்டினர். கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் இதனை கண்டு களித்தனர்.
சீறிய காளைகள்; மல்லுக்கட்டிய வீரர்கள்!
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் இளைஞர்கள் உற்சாகத்தோடு களத்தில் இறங்கி மல்லுக்கட்டினர்.
jallikattu
300க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக காளைகள் மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மீன்பாடி வண்டியில் மறுவீடு: வழக்கத்தையும் தொழிலையும் மதித்து உதாரணமாக மாறிய புதுமணத் தம்பதி!