மதுரை மாவட்டத்திலும் நகர்ப்புறங்களிலும் அவ்வப்போது கொலைவெறி கும்பல்களால் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
அண்மை காலமாக பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் மாநகர் பகுதிகளில் அவ்வப்போது இறந்தவர்கள் நினைவு நாளை முன்னிட்டு எதிர் தரப்பினரை அச்சுறுத்தும் வகையில் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தோடு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்படுகின்றன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி வாசலில், கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்தவரை பழி தீர்க்கப் போவதாக கல்லூரி மாணவனின் நண்பர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.