மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் உள்ளூரிலேயே வேட்பாளர்கள் கிடைக்காமல், தகுதியை வைத்து வேட்பாளர்களை வரையறை செய்திருக்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார்.
மேலும், காஞ்சிபுரத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளரின் தகுதி என்ன, அவருடைய கட்சிப் பணி என்ன, அவருக்கான மக்களின் தொடர்பு என்ன என்பது அதிமுக சொல்வதற்கு முன்பாகவே மக்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது என்று கூறினார்.