தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனாவுக்கு இடையே கற்பித்தல் பணி... மலைக்கிராமக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்! - மலை கிராமக் குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்பு

மதுரை அருகே உள்ள மலைக்கிராமங்களில் வாழும் பள்ளிக் குழந்தைகளுக்கு, இந்தக் கரோனா காலத்திலும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் ஆங்கில வகுப்பு எடுத்து வரும் ஆசிரியர் பாலமுருகன் ஊக்கமளித்து வருகிறார்.

ஆங்கில வகுப்பெடுக்கும் தனியார் ஆசிரியர்
ஆங்கில வகுப்பெடுக்கும் தனியார் ஆசிரியர்

By

Published : Aug 13, 2021, 10:00 AM IST

Updated : Aug 13, 2021, 1:16 PM IST

மதுரை: பாலமேடு அருகே உள்ளது மலையூர் கிராமம். இந்தக் கிராமம் ஏறக்குறைய 2,000 அடி உயரத்தில் மலையில் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வயதில் இருக்கிறார்கள்.

கரோனாவுக்கு இடையே கற்பித்தல் பணி

மழைக்கும் பள்ளிகளில் ஒதுங்க முடியாத சூழலை இந்தக் கரோனா காலம் ஏற்படுத்தியுள்ள சூழலில், பள்ளிக்குச் செல்ல முடியாத இப்பகுதி குழந்தைகளுக்கு கடச்சநேந்தல் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஆர்.பாலமுருகன் வாரம் இரண்டு நாள்கள் ஆங்கில வகுப்பு எடுத்து ஊக்குவித்து வருகிறார்.

இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாலும் சேவை மனப்பான்மையுடன் இதுபோன்று பல்வேறு கிராமங்களுக்குச் சென்று குழந்தைகளின் ஆங்கில மொழித் திறனை ஊக்குவித்து வருகிறார்.

கரோனாவுக்கு இடையே கற்பித்தல் பணி

மலைக்கிராம குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்பு

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாலமுருகன், "ஏற்றம் அகாதெமி என்ற அமைப்பின் மூலமாக இந்தப் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். குறிப்பாக கிராமத்தில் வசிக்கின்ற பள்ளிக் குழந்தைகளின் ஆங்கிலத் திறனை ஊக்குவிப்பதுதான் எனது நோக்கம்.

மலையூர் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமமாகும். இப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட குறைந்தபட்சம் ஐந்து கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.

நகர்ப்புறத்தில் வாழ்கின்ற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் இந்தக் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது என்றே நான் கருதுகிறேன். இதைத் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வாய்ப்பளித்தால் அனைத்துக் கிராம குழந்தைகளுக்கும் என்னால் இயன்றவரை ஆங்கில மொழி கற்பிக்கும் சேவையை தொடர்ந்து செய்வேன்" என்றார்.

இதையும் படிங்க:கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த யோகா ஆசிரியை புதிய உலக சாதனை!

Last Updated : Aug 13, 2021, 1:16 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details