திருநெல்வேலியைச் சேர்ந்த ஜோவின் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1954 முதல் 1963 வரை இருந்துள்ளார். கல்வி வளர்ச்சியைப் பொறுத்தவரை அவரது செயல்பாடுகள் அளப்பரியவை. அவர் தொடங்கிய பல கல்வித் திட்டங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.
இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறது. அவரை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சிலையை வைத்துள்ளது. காமராஜரின் பிறந்தநாளன்று ஏராளமான கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காமராஜரை பின்பற்றுவோர் இணைந்து பல சங்கங்களை உருவாக்கி, ஏராளமான நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர்.