தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாம்பன் ரயில் பாலத்தில் 55 நாள்களுக்குப் பிறகு ரயில் சோதனை ஓட்டம்! - ராமேஸ்வரம்

பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 55 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்படாத நிலையில், இன்று (ஆக. 28) பயணிகள் இல்லாத ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

பாம்பன் ரயில் பாலம், PAMBAN
பாம்பன் ரயில் பாலம்

By

Published : Aug 28, 2021, 7:47 PM IST

Updated : Aug 28, 2021, 8:18 PM IST

ராமநாதபுரம்:மண்டபம் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரயில் பாலம். இரண்டரை கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாம்பன் ரயில் பாலத்தில் சுமார் 143 தூண்கள் உள்ளன. பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் 20 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக மட்டுமே செல்லும்.

இந்நிலையில், பாம்பன் பாலத்தில் அவ்வப்போது சென்சார் கோளாறு ஏற்படும்போது, பாம்பன் பாலம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் செல்ல தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கும்.

மண்டபம் வரை மட்டும்

இந்தச் சூழலில் கடந்த ஜூன் 28ஆம் தேதி பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக சுமார் 55 நாள்களுக்கும் மேலாக பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் செல்லத் தடை விதித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் இல்லாத ரயில் சோதனை ஓட்டம்

இதனால், ராமேஸ்வரத்தில் இருந்து வெளி மாநிலம், வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டிய ரயில்களும், வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திற்கே வந்து செல்கின்றன.

இரண்டாவது சோதனை ஓட்டம்

மேலும், பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் தொடர்ந்து அலுவலர்கள் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில், சென்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி பயணிகள் இல்லாத ரயிலை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதேபோல், இன்று மீண்டும் பயணிகள் இல்லாத ரயிலை வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்தச் சோதனை ஓட்டத்திற்கு பின்பு, ரயில் பாலத்தில் ஏற்பட்ட அனைத்துப் பழுதுகளும் சரி செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய பின், மீண்டும் பாம்பன் பாலம் வழியாக ரயில்கள் செல்லும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாம்பன் தூக்கு பாலத்தில் பாறையில் சிக்கிய படகுகள்

Last Updated : Aug 28, 2021, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details