மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வேண்டிய காளைகளின் எண்ணிக்கை அதிகம் இருந்த காரணத்தால், போட்டி நடைபெறும் நேரம் நீட்டிக்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு!
பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்னும் அதிக காளைகள் பங்கேற்க வேண்டி இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி கூடுதலாக அரை மணிநேரம் நீட்டிக்கப்பட்டது.
பாலமேடு ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு
காலை 8 மணிக்கு தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு மாலை 4 மணியுடன் நிறைவடைந்திருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் 4.30 மணிவரை ஜல்லிக்கட்டு நடத்தும் நேரத்தை நீட்டிப்பு செய்ய மதுரை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.