தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டிடிவி தினகரனால் அது முடியாது: துணை முதலமைச்சர் ஓபிஎஸ் - அதிமுக

மதுரை: டிடிவி தினகரனால் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ops

By

Published : Apr 20, 2019, 9:29 AM IST

டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்டதும் அவர் அமமுகவை தொடங்கினார். ஆனால் அவர் அதனை தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்யாததால் அமைப்பாக செயல்பட்டு வந்தது.

இதனால் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் உச்ச நீதிமன்றம்வரை சென்று பொதுச்சின்னமாக பரிசு பெட்டியை பெற்று வந்தார் தினகரன்.

இதனையடுத்து, அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி (திங்கட்கிழமை) பதிவு செய்யப்போவதாக தினகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்யப்போவது அவர்கள் விருப்பம். டிடிவி. தினகரன் தரப்பினர் எக்காலத்திலும் அதிமுகவை உரிமைகோர முடியாது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details