தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கனிமொழிக்கு முத்தமிட்டு வாழ்த்திய பாட்டி! - மதுரை செய்திகள்

மதுரை: தேர்தல் பரப்புரையின்போது திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு வயதான பெண்மணி ஒருவர் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

kanimozhi
kanimozhi

By

Published : Feb 8, 2021, 7:40 PM IST

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பிலான திமுகவின் பரப்புரை கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்த கனிமொழி, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அதேபோல், மதுரை பழங்கானத்தத்தில் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்ட அவர், அங்கு தனக்கு தேவையான பழங்களை வாங்கினார். அப்போது சந்தைக்கு வந்த பலர் கனிமொழியோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

கனிமொழிக்கு முத்தமிட்டு வாழ்த்திய பாட்டி!

அச்சமயம் அங்கு வந்த முதிய பெண் ஒருவர், கனிமொழியோடு படம் எடுத்துக் கொள்ள விரும்பினார். உடனடியாக கனிமொழியும் அந்த பாட்டியின் தோள் மீது கை போட்டு படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த பாட்டி கனிமொழியை கட்டி அணைத்து முத்தமிட்டு வாழ்த்தினார். கனிமொழியும் அவருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றார்.

இதையும் படிங்க: திமுக தேர்தல் அறிக்கையும், ஸ்டாலினும் தேர்தல் கதாநாயகர்கள்- கனிமொழி எம்பி

ABOUT THE AUTHOR

...view details