மதுரையில் மட்டும் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், இம்மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 204 பேர் மட்டுமே தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அதிலும், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்கள் 70 பேர் மட்டுமே வாக்குகளை பதிவு செய்தனர். எஞ்சிய நூற்றுக்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடிக்கே வரவில்லை.
இதுகுறித்து நாம் திருநங்கைகளிடம் கேட்டபோது, ”மதுரை மாவட்டத்தில் இருக்கும் திருநங்கைகளில் பலர் தங்களை மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்து கொள்ள முன்வருவதில்லை. இதற்கு சமுதாயத்தின் பார்வையும் ஒரு காரணம். அதுமட்டுமல்லாது மருத்துவர்களிடம் சென்று சான்றிதழ் பெறும்போது, பெண்கள் என்றே எங்களை குறிப்பிடுகின்றனர்.