தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக, திமுக தவிர தமிழ்நாட்டை வேறு யாராலும் ஆள முடியாது - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழ்நாட்டை என்றுமே அதிமுகவும் திமுகவும் தான் ஆட்சி செய்யமுடியும் என்றும், மாற்று கட்சியினர் ஆள முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி

By

Published : Feb 25, 2022, 8:03 AM IST

மதுரை:முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கேகே நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் திமுக வென்றதற்குக் காரணம்.

ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அதிமுக தனித்து களம் கண்டது.அதிமுகவில் தலைமையே கிடையாது. இப்போது இருப்பவர்களைக் கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம். அதிமுகவின் தோல்விக்குக் காரணம் என்ன என்பது குறித்துப் பேசி முடிவு எடுப்போம்.

திமுகதான் அதிமுகவில் இணையும்

அதிமுக வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. திமுக ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அதிமுக திமுகவில் இணைந்துவிடும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. திமுக தான் அதிமுகவில் இணையும்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி

பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்குக் காரணம் அது எப்போதும் வளரும் கட்சி தான், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள். தமிழ்நாட்டில் என்றுமே திமுக, அதிமுக தான் ஆட்சி செய்யும். மாற்றுக் கட்சியினர் யாராலும் ஆள முடியாது"என்றார்.

இதையும் படிங்க:2ஆவது வழக்கில் ஜெயக்குமாருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details