மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் முடிவடைந்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முன்பதிவு டோக்கன்கள் சுமார் 700 காளைகளுக்கும் 730 மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டை கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அரசு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் அவனியாபுரத்தைச் சேர்ந்த 16 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.