மத்திய ரயில்வே அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றை பயணிகளுக்காக அறிவித்துள்ளது. அதில், "வருகிற ஏப்ரல் மாதம் முதல் சாதாரண பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை. பயணிகள் ரயில்கள் இயக்குவது குறித்து இதுவரை எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை
ஏற்கனவே 65 விழுக்காடு பயணிகள் விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் மட்டும் 250க்கும் மேற்பட்ட புதிய சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. படிப்படியாக மேலும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ரயில்களை இயக்குவதற்கு எல்லாவிதமான அம்சங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
பயணிகளிடம் இருந்து வரும் அனைத்து விதமான கருத்துக்களும் ஆலோசிக்கப்படுகின்றன. ஊகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். பயணிகள் ரயில்கள் இயக்குவது சம்பந்தமான முடிவுகள் உடனுக்குடன் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில்கள் இயக்கம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
வருகிற ஏப்ரல் மாதம் முதல் சாதாரண பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
பயணிகள் ரயில்கள் இயக்கம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி