கேரளாவில் நிபா வைரஸ் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸ்க்கு என தனி தீவிர சிகிச்சைப் பிரிவுத் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இப்பிரிவில் 33 படுக்கை வசதிகளை தனி அறையும் தயார்நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிபா வைரஸ் தாக்கம் எதிரொலி..! தயார் நிலையில் தமிழகம் - government hospital
மதுரை: அரசு ராஜாஜி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு புதிய சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
நிபா வைரஸ் தாக்கம் எதிரொலி..! தயார் நிலையில் தமிழகம்
24 மணி நேரம் செயல்படும் இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேவையான மருந்துகளும், உபகரணங்களும் இருப்பு வைக்கபட்டுள்ளது என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.