தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழைநீரை அறுவடை செய்யும் பொறியாளரின் சீரிய கட்டமைப்பு!

மதுரை: மழைநீரை சேமித்தன் மூலம் ஒரு குடும்பத்திற்கான தண்ணீர் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதற்கு, ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை பொறியாளர் அருணாசலத்தின் கட்டமைப்பு அனைவருக்கும் ஒரு வழிகட்டுதலாக அமைந்துள்ளது.

மழைநீரை அறுவடை செய்யும் பொறியாளரின் சீரிய கட்டமைப்பு

By

Published : Jul 5, 2019, 7:24 AM IST

மதுரையைச் சேர்ந்த முன்னாள் தலைமை பொறியாளர் அருணாச்சலம் என்பவர், 700 சதுர அடி கொண்ட தனது வீட்டில் மொட்டை மாடியில் மட்டும் சிறந்த மழைநீர் வடிகால் அமைப்பை உருவாக்கி, தனது வீட்டிற்குத் தேவையான குடிநீர்த் தேவையைச் சிறப்புடன் பூர்த்தி செய்து வருகிறார், வீட்டு மொட்டை மாடியில் பொழிகின்ற மழை நீரை, முறையான கட்டமைப்பின் வாயிலாக வடிகட்டி, தண்ணீர் தொட்டியில் சேமித்து, அதனைக் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.

அது குறித்து அவர் கூறும்போது, ’மழைநீர் சேகரிப்பு என்ற விஷயத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்த வீட்டை நான் கட்டினேன், இந்த வீட்டின் மொட்டை மாடியில் விழுகின்ற, மழை நீர் அனைத்தும் சேமிக்கப்பட்டு வீட்டின் கீழே உள்ள மிகப் பெரிய தொட்டியில் தண்ணீர் அனைத்தும் கொண்டுசெல்லப்படுகின்றன அங்கிருந்து மோட்டார் மூலம் வீட்டின் மொட்டை மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்க் கொண்டு செல்லப்பட்டு அந்த தண்ணீரைப் பயன்படுத்தி வருகிறோம்.

மழைநீரை அறுவடை செய்யும் பொறியாளரின் சீரிய கட்டமைப்பு

மழைநீரில் நமக்குக் கிடைக்கக்கூடிய இயற்கையான நுண்ணூட்டங்கள், நம் உடலின் ஆதார சக்திக்குப் பெருந்துணை புரிகின்றன. ஆகையால் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகள் பலமடைகின்றன. இந்த தண்ணீர் மூலம் சமைக்கப்படும் உணவுகள் மிகச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறது. வானத்திலிருந்து பொழிகின்ற மழை நீரை, நாம் முறையாகச் சேமித்துப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று பயன்படுத்தியது போக மீதம் உள்ள நீரையும் பூமித் தாய்க்குக் கொடுப்பது நம் கடமையாகும்’ என்றார்

ABOUT THE AUTHOR

...view details