மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியர் வசந்தா பொறுப்பேற்றதையடுத்து காமராஜர் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது பெண் பதிவாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக புதிய பதிவாளர் - பேராசிரியர் வசந்தா பொறுப்பேற்பு - புதிய பதிவாளர் - பேராசிரியர் வசந்தா பொறுப்பேற்பு
மதுரை: காமராசர் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியர் வசந்தா பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னதாக பதிவாளராக பணியாற்றிய பேராசிரியர் சங்கர் நடேசன் பணிச்சுமை காரணமாக பணியில் இருந்து விடுபட துணைவேந்தருக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து புதிய பதிவாளர் தேர்வு குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் குமரேசன், பேராசிரியர் சுதா, மற்றும் பேராசிரியர் வசந்தா ஆகியோர் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது .
இதில் பேராசிரியர் வசந்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். மேலும் பல்கலைக்கழக வேதியியல் துறையின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.