தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் இயற்கை கண்காட்சி எப்போது? - nature exhibition

மதுரை: இயற்கை முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக 'மண் மணக்கும் தூய்மை மதுரை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி வரும் 19-21ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது என மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.

madurai commisioner visakan

By

Published : Jul 18, 2019, 12:30 AM IST

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறுகையில் "மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி இணைந்து, வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, மதுரை தமுக்கம் மைதானத்தில் இயற்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக "மண் மணக்கும் தூய்மை மதுரை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சியை நடத்த இருக்கிறது.

இந்த கண்காட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு வழிமுறைகள், வீட்டுத்தோட்டம், இயற்கை பொருட்கள், உணவுகள் என பல்வேறு தலைப்புகளுக்கு ஏற்ப அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இயற்கை பெருவிழா போட்டிகள் 2019 என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான விழிப்புணவு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், மதுரையை தூய்மை நகராகவும், இயற்கை மிக்க நகராக மாற்றுவது தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடைபெறும்.

இந்த பணிகளுக்காக அகற்றும் மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்வதற்கு மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சி பகுதிகளில் அதிக மரங்கள் வளர்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details