தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கில் திருப்தியில்லை’ - நீதிபதி சரமாரி கேள்வி - மதுரை செய்திகள்

மதுரை: ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்
ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

By

Published : Oct 27, 2021, 1:28 PM IST

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படுபவர்கள் ஆவர். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நிதி நிறுவனத்துக்கு உதவியாக செயல்பட்ட சோலை செல்வம் என்பவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

இதில் அரசு தரப்பில், நிதி நிறுவன வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும்,
தற்போது பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது விசாரணை அலுவலர் நேரில் ஆஜராகி வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி புகழேந்தி ”விசாரணை நிலுவையில் இருக்கும்போது, முக்கியக் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். ஏன்...கீழமை நீதிமன்றத்தில் முறையான வாதங்களை வைக்கவில்லையா? பல்வேறு குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் இருப்பதாக குற்றம் சாட்டஉள்ள நிலையில் ஜாமீனில் சென்றால் அவர்களிடம் உள்ள சொத்துகளை எவ்வாறு பறிமுதல் செய்ய முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு திருப்பிச் செலுத்துவது? இதனையெல்லாம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?” என விசாரணை அலுவலரிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

மேலும் ”முக்கியக் குற்றவாளியின் மனைவி ஒரு வழக்கில்தான் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால் இந்தச் சம்பவத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன்? வேறு வழக்குகளில் அவரை ஏன் கைது செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ”விசாரணை முறையாக நடைபெற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு விசாரணை அலுவலர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.

மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரிய சோலை செல்வத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு அரசின் புதிய ஆலோசகர் ஆகிறாரா அசோக்வர்தன் ஷெட்டி?

ABOUT THE AUTHOR

...view details