தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லையில் புதிதாக இயக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகள்!

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து மதுரைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் ராஜலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

air bus inauguration in thirunelveli

By

Published : Nov 5, 2019, 6:02 PM IST

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மக்களின் தேவைக்கேற்ப புதிய வழித்தடங்களிலும் மற்றும் பழைய பேருந்துகளை புதியதாக, பெரிதாக மாற்றியும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கி வருகிறது. இந்த நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் நெல்லை மண்டலம் சார்பில், நெல்லையிலிருந்து மதுரைக்கு இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் தொடக்க விழா, நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் ராஜலட்சுமி பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லையில் புதிதாக இயக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்துகள்

இதையும் படிங்க: மியான்மரில் கடத்தப்பட்ட இந்தியத் தொழிலாளி மரணம்!

ABOUT THE AUTHOR

...view details