தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மனைவி இறந்த அன்றும்கூட ஜனநாயகக் கடமை ஆற்றிய பெரியவர் - அமைச்சர் நேரில் ஆறுதல் - madurai news

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நாளன்று இறந்துபோன தனது மனைவியின் இறுதிச்சடங்கைத் தள்ளிவைத்துவிட்டு வாக்குச்சாவடி சென்று ஜனநாயகக் கடமையாற்றிய முதியவரை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மனைவி இறந்த அன்றும்கூட ஜனநாயக கடமை ஆற்றிய பெரியவர்
மனைவி இறந்த அன்றும்கூட ஜனநாயக கடமை ஆற்றிய பெரியவர்

By

Published : Jul 17, 2021, 7:43 PM IST

மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் வசித்துவருகிறார் பழனிச்சாமி (65). இவருடைய மனைவி காளியம்மாள் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் நாளன்று உயிர்நீத்தார்.

அப்போது, பழனிச்சாமி இறுதிச் சடங்கை ஒத்திவைத்துவிட்டு வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினைப் பதிவுசெய்தார். அப்போதைய சூழலில் இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இது குறித்து சமூக வலைதளம் மூலம் தன்னுடைய பாராட்டினை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது குடும்பத்தாருடன் நேரடியாக மதுரை மேலவாசலிலுள்ள பழனிச்சாமியின் வீட்டிற்கே சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த காளியம்மாள் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பழனிச்சாமிக்கு ஆறுதல் கூறிய அவர் தமது நன்றியையும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை நெகிழவைத்தது.

இதையும் படிங்க: ஆதரவற்ற முதியோருக்கு அன்பு காட்டும் 'அடைக்கலம்' - இளைஞர்கள் உருவாக்கிய சரணாலயம்

ABOUT THE AUTHOR

...view details