தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 14, 2022, 3:05 PM IST

ETV Bharat / city

துரோகிகளைக் களையெடுத்து விடுவேன் - திமுகவினருக்கு அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு சுயேச்சை வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கையில் கட்சியினர் ஈடுபட்டால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

minister moorthy election campaign at madurai
அமைச்சர் மூர்த்தி

மதுரை: சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட பேரூராட்சிப் பகுதிகளான அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி ஆகிய பகுதிகளில் திமுக நிர்வாகிகளுடனான செயல்வீரர்கள் கூட்டமானது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் அனைத்து வார்டுகளிலும் வெற்றிபெற பாடுபட்டு உழைக்க வேண்டும் எனவும், மாற்றுக்கட்சி, சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்தால் பதவி பறிக்கப்படும் என மூர்த்தி எச்சரித்தார்.

அமைச்சர் மூர்த்தி

மேலும், மூர்த்தி பேசுகையில், “அதிமுக ஆட்சியின்போது பேரூராட்சியில் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும், ஊழல்வாதிகளை வெளிக்கொண்டு வந்து தண்டனை வழங்கப்படும்.

திமுக, கூட்டணிக் கட்சிகளை வெற்றிபெறச் செய்யாமல் சுயேச்சை வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால் யாரும் திமுகவில் இருக்க முடியாது. துரோகிகளைக் களையெடுத்து விடுவேன். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி அமைச்சர் யாரு நேரு; இங்க நான்தான் நேரு.

நான்தான் எல்லாம்; எனவே, பணம் வாங்கிக் கொண்டு சுயேச்சை வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய நினைத்து கட்சிக்குத் துரோகம் செய்ய நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்.

சுயேச்சை வேட்பாளர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் வழங்கக் கூடாது. திமுகதான் வெற்றிபெற வேண்டும். இதனை மீறுபவர்களைப் பழிவாங்குவேன். நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு யார் யார் எங்கிருக்க வேண்டுமோ அங்கு இருப்பர். இது மக்களுக்கு நன்கு தெரியும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் கடந்த எட்டு மாத காலத்தில் செய்த பணிகளுக்காகவும், சேவைகளுக்காகவும் மக்கள் 100 விழுக்காடு வாக்களித்து திமுக வெற்றிபெறும்” என்றார்.

பின்னர், சோழவந்தான் தொகுதியில் சேர்மன் பதவியை பாஜக கைப்பற்றும் என அண்ணாமலை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “பணத்தைக் கொடுத்து யாரும் வெற்றிபெற நினைத்தாலும் அது நடக்காது. திமுகதான் வெற்றிபெறும்” என்றார்.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் தொடர் விசாரணை: 100 கேள்விகளால் துளைத்த காவல்துறை...

ABOUT THE AUTHOR

...view details