தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சி, நகராட்சிகளில் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

மாநகராட்சி பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம்
மாநகராட்சி பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம்

By

Published : Sep 4, 2022, 10:54 AM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், கார்த்திக் சிதம்பரம், மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம்

அதன்பின் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் "மதுரைக்கு ஒரே ஆண்டில் 1,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 167 எம்.எல்.டி தண்ணீர் கொடுக்க வேண்டும். இப்போது 156 எம்.எல்.டி தண்ணீர் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் விநியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி பகுதிக்குள் 1,200 சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பாதுகாப்புக்காக ரூ.80 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பணிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளில் ஒப்பந்த முறை விரைவில் ரத்து செய்யப்படும். மாநகராட்சி, நகராட்சிகளில் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்"

ABOUT THE AUTHOR

...view details