தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சிற்றுந்து விபத்து: குழந்தை உள்பட இருவர் உயிரிழப்பு - mini bus accident in madurai

மதுரை: வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சிற்றுந்து மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை உள்பட இருவர் உயிரிழந்தனர்.

சிற்றுந்து
சிற்றுந்து

By

Published : Dec 5, 2020, 9:36 AM IST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினிபட்டியில் வசித்துவருபவர் சீனிவாசன். அவர் தனது இருசக்கர வாகனத்தில், மனைவி ராணி (31), ஒரு வயது குழந்தை ராமகிருஷ்ணனுடன் வாடிப்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாடிப்பட்டியிலிருந்து அதிவேகமாக வந்துகொண்டிருந்த, சிற்றுந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில், ராணி, குழந்தை ராமகிருஷ்ணன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த வாடிப்பட்டி காவலர்கள் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சீனிவாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிற்றுந்து பறிமுதல்செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

ABOUT THE AUTHOR

...view details