புதுக்கோட்டை: கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் பெரும்பான்மையாக கோனார், கள்ளர் மற்றும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர்.
முடிதிருத்தும் நிலையத்தில் பாகுபாடு
இதில் 150 குடும்பங்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மிக ஏழ்மையான நிலையில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், 1 சலவை நிலையமும் மட்டுமே உள்ளது. ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை.