தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

53 ஆண்டுகளுக்குப் பின் மதுரை மீனாட்சி கோயில் பூஜை செய்த மதுரை ஆதீனம்!

மதுரை மீனாட்சி கோயிலில் 53 ஆண்டுகளுக்குப் பின் பூஜை செய்த, மதுரை ஆதீனம் சார்பாக பூஜைகள் நடத்தப்பட்டன.

meenakshi_poojai_aadheenam
meenakshi_poojai aadheenam

By

Published : Dec 1, 2021, 6:17 PM IST

மதுரை: தெற்கு ஆவணி மூல வீதியில் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் பழமையான, தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடம் உள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அண்மையில் பதவியேற்றிருந்தார்.

நேற்று நவ.30ஆம் தேதியன்று மதுரை ஆதீன மடம் சார்பாக, உலகப் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை ஆதீன கர்த்தர் மீண்டும் பூஜைகளை மேற்கொண்டார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அலங்காரத்தில் காட்சி தரும் மீனாட்சி அம்மன்

இதையும் படிங்க: மதுரை மல்லி வாங்கலையோ - எத்திசையும் மணக்கும் மதுரை மல்லி!

ABOUT THE AUTHOR

...view details