இந்தியா முழுவதும் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கடந்த 2016 டிசம்பர் முதல் மதுரை மாநகராட்சியை சீர்மிகு நகரமாக மாற்றும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சொன்னது ரூ.500 கோடி கொடுத்தது 116 கோடி! - ஸ்மார் சிட்டி திட்டம் - ஸ்மார்ட் சிட்டி
மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ. 1.020 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மத்திய அரசின் பங்களிப்பான 500 கோடியில் இதுவரை 116 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மிக முக்கியத் திட்டமான வைகை ஆற்றை பராமரித்தல், கலாசார சின்னங்களைக் காத்தல், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியமான 9 திட்டங்களுக்கு சுமார் 1020 கோடி நிதி தேவைப்படும் என நிர்ணயிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசு அதன் பங்களிப்பாக சுமார் 500 கோடி ரூபாயைக் கொடுக்கும் என அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசானது இதுவரை 116 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாக மதுரை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.