தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்! - மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

மதுரையில் சமீப நாள்களாக கள்ளத்தனமான மதுவிற்பனை அதிகரித்துள்ளதால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்களை மொத்தமாக பணிடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அமலாக்கப் பிரிவு காவலர்கள்
அமலாக்கப் பிரிவு காவலர்கள்

By

Published : Nov 28, 2020, 7:32 AM IST

மதுரை: மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக கள்ளத்தனமான மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதைத்தடுக்க காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருந்தாலும் கள்ளத்தனமான மது விற்பனைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவலர்கள் அனைவரையும், அதிரடியாக பணியிட மாற்றம் செய்து விட்ட, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, பழைய காவலர்களுக்கு பதிலாக, புதிதாக 17 பேர் கொண்ட சிறப்பு குழுவினை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் காவலர்களால் கள்ளத்தனமான மது விற்பனை குறையும் என எதிபார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சோதனை முயற்சியாக மதுரை மாநகரில் ஒருவழிப்பாதை

ABOUT THE AUTHOR

...view details