தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’கரோனா பாதிப்பு எதுவும் இல்லை எங்களை வெளியே விடுங்க’ - சாலையை முற்றுகையிட்ட மக்கள் - madurai corona

மதுரை: கரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்ற பிறகும்கூட வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சாட்டி மதுரை தெற்குவாசல் பகுதி பொதுமக்கள் சாலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

madurai
madurai

By

Published : May 3, 2020, 1:45 PM IST

மதுரை மாநகராட்சி, சுகாதாரத் துறையால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி எனத் தெற்கு வாசல் கிரைம் பிரான்ச் பகுதி என அறிவிக்கப்பட்டு, அப்பகுதி முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதனால் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளிலிருந்து மக்கள் வெளியே வரவோ வெளியிலிருந்து உள்ளே செல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க மிகவும் சிரமப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். தங்கள் பகுதியில் கரோனா பாதிப்பு இல்லை என்று ஆன பின்னரும்கூட வீட்டைவிட்டு வெளியே வர எங்களை அனுமதிப்பதில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பொதுமக்கள் சாலையில் முற்றுகை

ஆகையால் உடனடியாகத் தங்களை அனுமதிக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:கரோனாவை எதிர்க்க அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கையாளும் டெக்னிக்!

ABOUT THE AUTHOR

...view details