தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நான் யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை: பேனர் வைத்து அறிவித்த காவல் ஆய்வாளர்.. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்! - madurai othakadai police inspector banner

யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பி. சரவணனின் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் பெற மாட்டேன்
லஞ்சம் பெற மாட்டேன்

By

Published : Dec 9, 2021, 1:07 PM IST

மதுரையில் உள்ள யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பி. சரவணன் என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், அவர் தனது அலுவலக வாசலில் யா.ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பி.சரவணன் ஆகிய நான் யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை.

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்

பொருளோ பணமோ கொடுக்க வேண்டாம்

என் பெயரைச் சொல்லிக்கொண்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை சுமூகமாக முடித்து தருவதாக கூறி யாரிடமும் எந்தவித பொருளோ பணமோ கொடுக்க வேண்டாம்.

அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று காவல் நிலைய முகப்பில் பேனர் அடித்து வைத்துள்ளார்.

முன்மாதிரி காவலர் குவியும் பாராட்டுகள்

நான் யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை

காவல் ஆய்வாளர் சரவணனின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதோடு, இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு விழா நடத்திய காவல் சார்பு ஆய்வாளர்

ABOUT THE AUTHOR

...view details