தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு ரத்ததானம் வழங்கிய மதுரை மநீம வேட்பாளர்! - madurai Makkal Neethi Maiyyam party

மதுரை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் மநீம கட்சியின் வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று (மார்ச் 19) ரத்ததானம் வழங்கி, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ரத்ததானத்திற்கு பின்  வேட்பு மனுதாக்கல் செய்த மதுரை மநீம கட்சி வேட்பாளர் மணி
ரத்ததானத்திற்கு பின் வேட்பு மனுதாக்கல் செய்த மதுரை மநீம கட்சி வேட்பாளர் மணி

By

Published : Mar 19, 2021, 5:47 PM IST

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளின் சார்பில் அந்தந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து பரப்புரையை நடத்தி வருகின்றனர்.

ரத்த தானத்திற்கு பின் வேட்பு மனுதாக்கல் செய்த மதுரை மநீம வேட்பாளர் மணி

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 19) இறுதி நாள் என்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

மநீம மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் மணி

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மணி இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமியிடம் தாக்கல் செய்தார்.

ரத்ததானம் வழங்கிய மதுரை மநீம கட்சி வேட்பாளர் மணி
வேட்பு மனுவை தாக்கல் செய்த மநீம வேட்பாளர்

15-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்

அதற்கு முன்னதாக மநீம கட்சி வேட்பாளர் மணி, அவரது மனைவியும், மாற்று வேட்பாளரான தேன்மொழியும் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.

ABOUT THE AUTHOR

...view details