தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாநகராட்சி கடைகள் வாடகை ரத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

நாகர்கோவில் மாநகராட்சி கடைகளின் வாடகையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Apr 5, 2022, 3:31 PM IST

மதுரை:கரோனா ஊரடங்கு காரணமாக நாகர்கோயில் மாநகராட்சி கடைகளுக்கான வாடகையை 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி ஏப்ரல், மே மாதங்களுக்கான வாடகைக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும்.

மீதமுள்ள வாடகையை செலுத்த வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று (ஏப். 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கரோனா ஊரடங்கு காரணமாக நாடே பல இன்னல்களை சந்தித்து வந்தது. இந்த காலகட்டத்தில் மக்கள் பணம் சம்பாதிக்க வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்தனர். இதுபோன்ற நேரத்தில் அரசே மக்களை காப்பாற்ற வேண்டும்.

தவறும் பட்சத்தில் நீதிமன்றம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:அரசுக்கு சொந்தமான கடைகளின் வாடகை உயர்வு.. வணிகர்கள் பாதிப்பு.. மு.க. ஸ்டாலின் தலையிட விக்கிரமராஜா கோரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details