கடந்த 2018ஆம் ஆண்டு தேனியில் இருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்திச் செல்வதாக மத்திய போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போதைப் பொருள் கடத்திய சென்னையைச் சேர்ந்த செல்வம், பால்பாண்டி ஆகிய இருவரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து 70கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.
கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
மதுரை: காரில் 70 கிலோ கஞ்சா கடத்திய இருவருக்கு தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
madurai special court
போதைப் பொருள் கடத்திய வழக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்தநிலையில், இன்று குற்றவாளிகள் இருவருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் அதிரடி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளாக சேமித்துவைத்த போதைப்பொருள்கள் அழிப்பு!