தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தக்கோரி சைக்கிள் பேரணி

மதுரை: மத்திய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செலவழிக்கும் தொகையை மாநில அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சைக்கிள் பேரணி

By

Published : May 30, 2019, 8:26 AM IST

மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாணவர்கள் பிரிவான எஸ்எஃப்ஐயின் சார்பில் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மே 25ஆம் தேதி சைக்கிள் பேரணியை தொடங்கினர். இந்தப் பேரணி 31ஆம் தேதி முடிவு பெறுகிறது.

இந்நிலையில் கன்னியாகுமாரி களியக்காவிளையிலிருந்து தொடங்கி மதுரை திருப்பரங்குன்றம் வரை சைக்கிளில் பேரணியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்றனர்.

அரசுப் பள்ளியின் கல்வித் தரம் உயரவேண்டி சைக்கிள் பேரணி

இது குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் பேசியதாவது, "மத்திய அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 27 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு செலவு செய்கிறது. ஆனால் மாநில அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் கண்டு கொள்வதில்லை, இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் மூன்று லட்சம் பள்ளிகள் மற்றும் இந்திய அளவில் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளன. அதனை மீட்டெடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details