தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரையில் ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் சித்திரை திருவிழா - சித்திரை திருவிழா தேதிகள்

மதுரை: உலகப் புகழ்மிக்க சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சித்திரை திருவிழா

By

Published : Mar 27, 2019, 4:48 PM IST

நிகழ்ச்சி நிரல்

  • சித்திரை திருவிழா வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
  • அன்றைய தினம் அம்மனும் சுவாமியும் கற்பகம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
  • ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று பூதம் மற்றும் அன்ன வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
  • ஏப்ரல் 10 ஆம் தேதி காமதேனு வாகனத்திலும் ஏப்ரல் 11ம் தேதி தங்கப் பல்லக்கிலும் ஏப்ரல் 12ஆம் தேதி தங்க குதிரை வாகனத்திலும் அம்மனும் சுவாமியும் எழுந்தருளுகின்றனர்.
  • ஏப்ரல் 13 ஆம் தேதி சைவ சமயம் ஸ்தாபித வரலாற்று லீலை நடைபெறுகிறது அன்று ரிஷப வாகனத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருள்கின்றனர்
  • ஏப்ரல் 14ம் தேதி யாளி வாகனத்திலும் ஏப்ரல் 15 ஆம் தேதி அருள்மிகு மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடைபெற இருக்கின்ற வைபோகம் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர் .
  • ஏப்ரல் 16ம் தேதி திக்கு விஜயம்.
  • ஏப்ரல் 17 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
  • ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
  • ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி தல்லாகுளத்தில் நடைபெறுகிறது .
  • ஏப்ரல் 19ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றிலில் எழுந்தருள்கிறார். அன்றைய தினம் இரவு வண்டியூரில் கள்ளழகர் தங்குகிறார்.
  • ஏப்ரல் 20 ஆம் தேதி வண்டியூரில் உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருமாலிருஞ்சோலை கள்ளழகர் அருளைப் பெறுகின்றனர்.
  • ஏப்ரல் 21ஆம் தேதி மோகன் அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
  • சித்திரை திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக ஏப்ரல் 22 ஆம் தேதி அருள்மிகு கள்ளழகர் அழகர்மலைக்கு சென்றடைகிறார்.

ABOUT THE AUTHOR

...view details