தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை குழந்தை விற்பனை வழக்கு: இருவருக்குப் பிணை

மதுரை காப்பகத்தில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் இரண்டு பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, madurai highcourt madurai bench
இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம்

By

Published : Sep 3, 2021, 8:52 PM IST

மதுரை:மதுரை மாவட்டம் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டுவந்தது. இந்தக் காப்பகத்திலிருந்த இரண்டு குழந்தைகள் கரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறி, அந்தக் குழந்தைகளை வேறு நபர்களுக்குப் பணத்திற்காக விற்பனை செய்த செயல் சமீபத்தில் நடந்தது.

இதையடுத்து, அவ்விரு குழந்தைகளையும் கண்டுபிடித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், அவ்வழக்கில் காப்பகத்தின் இயக்குநர் சிவகுமார், இவரது உதவியாளர் மதர்ஷா, ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட பலரை தல்லாகுளம் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

நிபந்தனையில் பிணை

இவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில், பிணை கேட்டு ராஜா, செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தனர்.

இந்நிலையில், காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்படி இருவருக்கும் பிணை வழங்கி நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details