தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதுரை - போடி அகல ரயில்பாதை திட்டம் - இன்று 2ஆம் கட்டமாக சோதனை ஓட்டம்! - மதுரை மாவட்ட அண்மை செய்திகள்

மதுரை - போடி அகல ரயில்பாதை திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை இன்று (டிச.11) இரண்டாம் கட்டமாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Madurai Bodi broad-gauge project
Madurai Bodi broad-gauge project

By

Published : Dec 12, 2020, 6:35 AM IST

மதுரை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விளையும் ஏலக்காய், கிராம்பு போன்ற நறுமண பொருட்களை பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மதுரை - போடி ரயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பப்பட்டது. குறுகிய (மீட்டர் கேஜ்) ரயில் பாதையாக இருந்த இந்த பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக 2008ஆம் ஆண்டு, 165 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள், கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. 20க்கும் அதிகமான பெரிய மேம்பாலங்கள், 100க்கும் அதிகமான சிறிய பாலங்கள் அமைக்கும் பணிகள் 10 ஆண்டுகளாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதில் உசிலம்பட்டி வரை உள்ள பகுதியில், கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் இரு மலைகளை குடைந்து அகல ரயில்பாதை அமைக்கும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகள் நிறைவடைந்த சூழலில், இன்று(டிச.11) உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை, இரண்டாம் கட்டமாக சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

மதுரை - போடி அகல ரயில்பாதை திட்டம்

இதில், ரயில் எஞ்சின் ஒன்று 50 கி.மீ., வேகத்தில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை சென்றது. 21 கிலோ மீட்டர் தூரம் சென்ற எஞ்சின், மீண்டும் 90 கி.மீ., வேகத்தில் உசிலம்பட்டி திரும்பிச் சென்று அகல ரயில் பாதையின் உறுதி தன்மை சோதித்தறியப்பட்டது.

இரண்டு சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள போடி வரையிலான பணிகள் நிறைவுற்று, மதுரை - போடி ரயில் சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சென்னை - ரேணிகுண்டா இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம்!

ABOUT THE AUTHOR

...view details